தமிழ்நாட்டில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக குறித்து விமர்சித்து செய்தி ஒன்று வெளியானது. அந்தச் செய்தி அதிமுகவிற்கு சாதகமாக இருந்ததால், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் செய்திதாள்களை, அதிமுகவினர் இன்று வேதாரண்யம் தொகுதியில் பொதுமக்களிடம் விநியோகம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக செய்திதாள்தளை அதிமுகவினர் விநியோகம் செய்ததாக திமுகவினர் அதிமுகவினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேதாரண்யம் காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் 15 ஆயிரம் நாளிதழ் பிரதிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பேரவைத் தேர்தல் 2021: வாக்காளர்களே இது உங்களுக்கான அறிவுரைகள்!