நாகப்பட்டினம்: காணொலி காட்சி மூலம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களை விமர்சித்துப் பேசினார்.
தமிழ்நாட்டை மீட்போம் என்ற தலைப்பில், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்றது.
இதில் காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்தவாறு பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த முன்னோடிகள் 200 பேருக்கு பொற்கிழி வழங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய மு. க ஸ்டாலின், கரோனா காலத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ரேஷன் அரிசியை பதுக்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்து ஊழல் செய்தார். புயல் நேரத்தில் உணவுத்துறை அமைச்சரின் அலட்சியத்தால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் முளைத்து வீணாயுள்ளது. அமைச்சர் காமராஜ் பெயர் இனி காமராஜ் கிடையாது கமிஷன்ராஜ் என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனக்கு சொந்தமான இறால் பண்ணைகளை மேம்படுத்துவதற்காக அடப்பாற்றில் தடுப்பணை கட்டி விவசாயிகளுக்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஓரடியம்புலம் சமுதாய கூடத்தை இடித்து தரை மட்டமாக்கி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது சொந்தப் மாட்டுக் கொட்டகையாக மாற்றியது ஏன்?.
கஜா புயலின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியவர் தான் இந்த ஒ.எஸ். மணியன் என இவ்வாறு விமர்சனம் செய்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: சென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை