ETV Bharat / state

நாகூர் வர உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி; திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்!

RN Ravi: ஆளுநர் ஆர்.என்.ரவி நாகூர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக கூட்டணி கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திமுகவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 8:55 AM IST

திமுகவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்

நாகப்பட்டினம்: நாகூரில் உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. தர்காகவின் 467வது கந்தூரி விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளூநர் ஆர்.என்.ரவி நாளை நாகூருக்கு வருகை தர உள்ளார்.

நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, மனிதநேய மக்கள் கட்சி திராவிடர் கழகம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆளுநருக்கு கருப்புக்கொடி: இக்கூட்டத்தில் நீட், ஆன்லைன் சூதாட்டம், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களுக்கு தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் விரோதமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாகூர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா: நாகூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 10 நாட்கள் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மதம் பேதமின்றி பங்கேற்பார்கள்.

அதேபோல், இந்த ஆண்டு நாகூர் தர்காவின் 467வது கந்தூரி விழா, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியோடு நாகூர் ஆண்டவர் தர்காவின் 5 மினாராக்களில் கொடியேற்றப்பட்டு, வெகு விமரிசையாக தொடங்கியது.

இதனிடையே, கொடியேற்றத்திற்காக சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட புனித கொடிகள், நாகப்பட்டினம் மீரான் பள்ளிவாசலில் அனைத்து முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையிலும் துஆ (Du'a) ஓதப்பட்டு, பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தில் வைத்து ஊர்வலமாக நாகூர் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.