ETV Bharat / state

புகார் அளித்தால் அலட்சியம் காட்டும் தேர்தல் அதிகாரி - திமுக குற்றச்சாட்டு - DMK

நாகை: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரியான சுரேஷ்குமார் புகார் தெரிவிக்க அழைத்தால் தொலைபேசியை எடுப்பதில்லை என்றும், தேர்தல் முடியும் வரை மயிலாடுதுறையில் தங்கித் தேர்தல் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திமுக குற்றச்சாட்டு
author img

By

Published : Mar 27, 2019, 4:40 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரசார வாகன அனுமதி உள்ளிட்டவை பெற வேண்டுமென்றால் வேட்பாளர் நாகப்பட்டினம் செல்ல வேண்டிய நிலையுள்ளது.

மேலும், தேர்தல் விதிமீறல் உள்ளிட்ட எந்த புகார் அளிக்க வேண்டும் என்று தொடர்பு கொண்டால், மாவட்ட தேர்தல் அதிகாரி தொலைபேசியை எடுப்பதில்லை என்றும், வாகன அனுமதியும் பாரபட்சமாக வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய திமுகவினர், தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் தேர்தல் முடியும் வரை மயிலாடுதுறையில் தங்கித்தேர்தல் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Intro:மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தல் அதிகாரிமான மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் எந்த தொலைபேசியையும் எடுப்பதில்லை. தேர்தல் முடியும் வரை மயிலாடுதுறையில் தங்கி தேர்தல் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் திமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் துணை தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் கண்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் பிரச்சார வாகன அனுமதி உள்ளிட்டவை பெற வேண்டுமென்றால் வேட்பாளர் நாகப்பட்டினம் செல்ல வேண்டிய நிலையுள்ளது. எந்த புகார் அளிக்க வேண்டும் என்றாலும் மாவட்ட ஆட்சியர் தொலை பேசியில் புகாரை பெறுவதில்லை என்றும், வாகன அனுமதி பாரபட்சமாக வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டிய திமுகவினர் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் தேர்தல் முடியும் வரை மயிலாடுதுறையில் தங்கி தேர்தல் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றனர்.

பேட்டி : இராம.சேயோன் - வழக்கறிஞர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.