பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திமுகவினர் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
திமுக நாகை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திமுக மாவட்ட அமைப்பாளர் சேயோன் தலைமையேற்றார். இதில், மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
அதேபோல் சித்தர்காடு, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை மக்களுக்கு எதிரானது என்று பொது மக்களிடம் விளக்கி கையெழுத்து பெற்றனர்.
இதையும் படிங்க: வீட்டுச் சுவர்களில் வண்ணம் கொண்டு எழுதி சிஏஏ-விற்கு எதிர்ப்பு