தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நேற்று (அக். 24) கொண்டாடப்பட்ட நிலையில், 12 மணி நேரம் வித்தியாசம் உள்ள அமெரிக்காவில் இன்று (அக். 25) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
காலையில் வீடுகளில் பூஜை செய்து தீபாவளி படையலிடும் இந்தியர்கள் மாலை வேளையில் அங்கு உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஒரே இடத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
டெலவேர் மாகாணத்தில் உள்ள மகாலட்சுமி ஆலயத்தில் அங்குள்ள இந்தியர்கள் கூட்டமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் அருகே உள்ள மைதானத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
டெலவேர், நியூஜெர்சி, பென்சில்வேனியா, நியூயார்க் ஆகிய மாகாணங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அவர்கள் அனைவரும் உற்சாகமாக தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: வெறும் கண்ணால் சூரிய கிரகணம் பார்த்தால் பார்வை பறிபோகும் - அறிவியல் தொழில் நுட்ப மையம் எச்சரிக்கை