ETV Bharat / state

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை -ஆட்சியர் - nagapattinam

நாகை: கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

collector sureshkumar
author img

By

Published : Aug 18, 2019, 4:28 AM IST

கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணையிலிருந்து அதிக அளவிலான தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வதனால் அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வெண்ணாறு, காவேரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களை பொது கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் தங்க வைப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. துணை ஆட்சியர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கரையோர பகுதிகளில் தொடர் கண்காணிப்பு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் ஆற்றுப் பகுதிகளில் நின்றவாறு செல்ஃபி எடுக்கக் கூடாது, மீன் பிடித்தல், குளிக்க செல்லக்கூடாது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை தடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

Intro:கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
Body:நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் காரணமாக
கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணையிலிருந்து அதிக அளவிலான நீர்
மேட்டூர் அணைக்கு வந்தது கொண்டிருப்பதனை தொடர்ந்து மேட்டூர்
அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படும் சூழ்நிலை
உள்ளது. வெண்ணாறு, காவேரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில்
வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் மக்கள் பாதுகாப்பான தங்க வைக்க
பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம், பொது கட்டிடங்கள் பள்ளிகள்,
கல்லூரிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் கண்டறியப்பட்டு தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும், துணை ஆட்சியர் நிலையில் மண்டல
அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கரையோர பகுதிகளில் தொடர்
கண்காணிப்பு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும்,
பாதுகாப்பு மையங்களில் உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் சுகாதாரம்
வசதிகள் உள்ளிட்டவர்களை உறுதி செய்திட சம்பந்தப்பட்ட
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு பெண்கள் உள்ளிட்ட
முதல்நிலை பொறுப்பாளர்கள், கால்நடைகளுக்கான முதல் நிலை
பொருப்பாளர்களும், பாம்பு பிடிப்பவர்கள், மரம் வெட்டுபவர்கள் ஆகியோர்கள்
கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மருந்துகள்
மற்றும் 108 அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது என்றும்.
மேலும், பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றின் குளிப்பது,
நீச்சலடித்து, மீன் பிடிப்பது கூடாது என்றும், நீர் நிலைகள் அருகே
நின்றவாறு கைப்பேசியில் சுயபடம் (செல்பி) எடுக்க கூடாது என்றும் நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள், குழந்தைகளை ஆறுகள்,
குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை
தடுத்திடவும், விவசாயிகள் கால்நடைகளுடன் நீர்நிலைகளின் வழியாக கடக்க
நேரிடும் போது கவனமாக கொண்டு செல்லு மாறும், சலவை தொழிலாளர்கள்
மற்றும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கின் போது
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.