ETV Bharat / state

நாகையில் அதி நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு - அதி நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

நாகை: மயிலாடுதுறையில் கரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் அதி நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளித்துவருகின்றனர்.

Disinfectant spray with ultra-modern machine in nagai

author img

By

Published : May 3, 2020, 9:51 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட திருவள்ளுவர் நகரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படடுள்ளது.

இதனையடுத்து, அவர் வசித்த பகுதிகளை சுற்றி உள்ள 12 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் சுகாதார நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டுவருகின்றனர்.

அதி நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

கரோனா தொற்று ஏற்பட்டவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினர் அதி நவீன இயந்திரம் மூலம் 12 வீதிகளிலும் கிருமிநாசினி தெளித்துள்ளனர்.

இதையும் படிங்க: காவலருக்கு கரோனா: காவலர் குடியிருப்பு முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.