ETV Bharat / state

சேதமடைந்த கருங்கல் தடுப்புச்சுவர் - பார்வையிட்ட மீன்வளத் துறை இயக்குநர்

நாகப்பட்டினம்: தரங்கம்பாடியில் கருங்கற்களால் ஆன தடுப்பு சுவற்றில் ஒரு பகுதி கடலில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்ததை மீன்வளத் துறை இயக்குநர் சமீரன் பார்வையிட்டார்.

பார்வையிட்ட மீன்வளத் துறை இயக்குனர்
பார்வையிட்ட மீன்வளத் துறை இயக்குனர்
author img

By

Published : May 23, 2020, 11:36 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ. 120 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா ஊரடங்கு உத்தரவால் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஆம்பன்’ புயல் கடல் சீற்றத்தால் கடலில் அமைக்கப்பட்டு வரும் கருங்கற்களால் ஆன தடுப்பு சுவற்றில் ஒரு பகுதி கடலில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.

இதனால் படகு நிறுத்தும் தளத்தில் தண்ணீர் புகுந்து படகுகள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டது. சேதமடைந்த பகுதியை நேற்று (மே 23) பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் ஆய்வு செய்து உடனடியாக பாதிப்படைந்த பகுதியை சரி செய்து தரக்கோரி முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடத்தை மீன்வளத் துறை இயக்குநர் சமீரன் ஐ.ஏ.எஸ் நேரில் வந்து பார்வையிட்டார். தடுப்பு சுவற்றை உடனடியாக சரி செய்து தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மீனவர்கள் அலை தடுப்பு சுவரின் அகலத்தையும், உயரத்தையும் அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள், அதிவேக குதிரைத்திறன் கொண்ட விசைப்படகுகளை பயன்படுத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் இதை அனைத்தையும் பயன்படுத்துவோரை கண்காணிக்க முதல்முறையாக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த இயக்குநர், சேதமடைந்த கருங்கல்லால் ஆன தடுப்பு சுவரை ஆய்வு செய்து தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க துறைமுக கட்டுமான பிரிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அவர் மீனவர்களிடம் கூறுகையில்; மீன்பிடிக்க சென்று இலங்கையில் சிக்கியுள்ள 12 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களை விரைவில் சொந்த ஊருக்கு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சித்திரைப் பட்டம் நிலக்கடலை விதைப்புப் பணி - மும்முரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.