ETV Bharat / state

விஜயகாந்த் மறைவு - தருமபுரம் ஆதீனம் மடாதிபதி இரங்கல்! - RIP Vijayakanth

Vijayakanth: சினிமாவில் நடிக்கத் தெரிந்தவர் வாழ்க்கையில் பொய்யாகக் கூட நடிக்க தெரியாதவர் என நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு தருமபுரம் ஆதீனம் மடாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Vijayakanth
நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு தருமபுரம் ஆதீனம் மடாதிபதி இரங்கல்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 3:33 PM IST

நாகப்பட்டினம்: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்மீகம் கொண்ட அரசியல்வாதியும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மரணம் சம்பவித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அரசியலில் நேர்மையும், ஆன்மீகப் பணிவும், சமுதாயத்தின் மீது இரக்கச் சிந்தனையும், மாற்றாரை மதிக்கும் பணிவும் கொண்ட தூய்மையான அரசியல்வாதி.

முன்னாள் எதிர்கட்சித் தலைவர், சினிமாவில் நடிக்க மட்டுமே அறிந்தவர், வாழ்வில் பொய்மையாகக் கூட நடிக்கத் தெரியாத உத்தமர். ஆன்மிகத்தை வாழ்வில் இணைத்தே காரியம் இயற்றும் மாமனிதப் புனிதரை தமிழகம் இழந்துவிட்டதே.

நாம் மதுரையிலிருந்த காலத்தில், அவருடைய தந்தையாருடனான தொடர்பும், அப்போது விஜயகாந்த் உடனான தொடர்பு, சமீபத்தில் நம்மைச் சந்தித்து ஆசி பெற்ற பிரேமலதா வரை குடும்பமே நம்மோடு தொடர்புடையது. நம் ஆதீனம் பட்டிணப் பிரவேச பிரச்னையின்போது, முதலாவதாக அறிக்கை கொடுத்து பக்கபலமாக நிகழ்வுக்கு கட்சித் தொண்டர்களை அனுப்பி வைத்தவர்.

தமிழகம் நேர்மையான அரசியல்வாதியை இழந்தது. சமுதாயத்தின் இதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது. ஆன்மிகம் அக்கறையுள்ளோரைத் தவிர்க்கவிட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவிக்கிறோம். ஆன்மா இறையடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்கிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.