ETV Bharat / state

விஜயதசமி வாழ்த்து நல்கிய தருமபுரம் ஆதீனம்! - Pujaa Special

தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மக்களுக்கு விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.

மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
தருமபுரம் ஆதீனம்
author img

By

Published : Oct 14, 2021, 9:30 PM IST

நாகை: மயிலாடுதுறையில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் விஜயதசமி வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, '9 நாள்கள் விரதமிருந்து அம்பாள் அரசுனை வதம் செய்த நாள் விஜயதசமி நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில்தான் விஜயன் (அர்ச்சுனன்) உள்ளிட்ட பஞ்சபாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தின் பொந்தினில் வைத்து, அதனை மீட்டெடுத்தனர். இதன் காரணமாகவே நம்மிடம் உள்ள ஆயுதங்களை எல்லாம் பூஜையில் வைத்து பூஜிக்கின்றோம்.

கல்வி கற்க தகுந்த நாள்

இன்றைய தினம் கலைமகளுக்கும் உகந்த தினம் என்பதால் மூல நட்சத்திரத்திலே ஆவாகனம் செய்து மூன்றாம் நாள் சரஸ்வதி பூஜையன்று, சிறு குழந்தைகளுக்கெல்லாம் ஹரி அமோர்த்த சித்தம் என்று அவர்களுக்கு சொல்லித் தருகின்ற நாள்.

தருமபுரம் ஆதீனம்

இன்றைய தினம் நூல்களை வைத்து பூஜை நடத்துவதோடு, அவற்றை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து நூல்களைப் படிப்போருக்கு எல்லா ஞானங்களும் கிடைக்கும். எனவே என்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய நூலறிவு நமக்கு முக்கியமானது.

திருமடங்களில் உள்ள பழைமையான ஓலைச்சுவடிகளில் சரஸ்வதி, துர்க்கை, இலக்குமி ஆகிய மூவரையும் மூன்று திருவுருவங்களாக வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்நாளில் உழவர்கள் ஏர்க்கலப்பை, மரக்கால் படி, தராசு ஆகியவற்றை வைத்து பூஜை செய்வதால், 'ஆயுத பூஜை' என்று கொண்டாடுகின்றோம்.

கல்வி கற்பதற்குரிய நூல்கள், எழுதுகோல்களை வைத்து பூஜிப்பதால் சரஸ்வதி பூஜை என்று கொண்டாடுகின்றோம். கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாகவும், கலைகளின் தொடக்க நாளாகவும் அமைந்துள்ளது, இந்நாள். 'பாரத நாட்டில் தொடங்கிய இந்த விழாவை உலகெங்கும் கொண்டாடுபவர்களுக்கு ஆசீர்வாதங்கள்' என அவர் தனது அருளாசி உரையில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோபப்பட்டா கட்டாறு, கரையும் இல்ல, தடையும் இல்ல - மாஸாக வெளியான அண்ணாத்த டீசர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.