ETV Bharat / state

கடல் சீற்றம்: டேனிஷ் கோட்டைத் தடுப்புச் சுவர் பாதிப்பு

தரங்கம்பாடியில் தொடர் கனமழை, கடல் சீற்றம் காரணமாக டேனிஷ் கோட்டையின் மதில் சுவர் பாதிக்கப்பட்டுள்ளது.

டேனிஷ் கோட்டை
டேனிஷ் கோட்டை
author img

By

Published : Nov 12, 2021, 3:45 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி கடற்கரை மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு டென்மார்க் நாட்டவரால் கி.பி. 1620இல், புகழ்வாய்ந்த டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது.

இந்தக் கோட்டையில், சுமார் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இரண்டு தளங்களில் உள்ளன. பண்டகசாலை, சிறைச்சாலை, சமையல் அறை, ராணுவ வீரர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. கோட்டையின் உள்புறத்தில் புல்வெளித் தளம், முதல் தளத்தைப் பார்வையாளர்கள் சுற்றிப் பார்க்க நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறையின் அருங்காட்சியகமாக விளங்கும் இதில் டேனிஷ் கால நாணயங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. டேனிஷ் கோட்டையைச் சுற்றிலும் முழுவதும் பிரமாண்டமான மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், கோட்டையின் மதில் சுவரில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி தடுப்புச் சுவர் சேதமடைந்தது.

தற்போது பெய்த கனமழை, கடல் சீற்றம் காரணமாகக் கோட்டை வெளியே இருந்த முள்வேலி தடுப்புச்சுவரின் மற்றொரு பகுதியும் சேதமடைந்துள்ளது. தொடர் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டை பாதிப்படையுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதனால் கோட்டையின் அருகே கருங்கல்லான அலை தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வெள்ள பாதிப்பைச் சீராக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை: வழக்கை எடுக்க நீதிமன்றம் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.