நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, சடையன்காடு, சல்லிகுளம், விழுந்தமாவடி, காமேஸ்வரம், உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் தற்போது நெற்பயிற்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் பெய்து வரும் கன மழையால், சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழையில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள், மீண்டும் முளைக்க ஆரம்பித்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடன் வாங்கி சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
பாரம்பரிய நெல் ரகங்களின் ’காப்பான்’
மேலும், பயிர் சேதத்தை வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.