கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகையை அடுத்த பரங்கிநல்லூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினக்கூலி தொழிலாளர்கள் கடந்த 40 நாள்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வருமானம் இழந்து ஒருவேளை உணவிற்கே அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய், அரிசி, பருப்புகள் ஒரு சில வாரங்களிலேயே தீர்ந்துவிட்டதாகவும், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக விலை கொடுத்துப் பொருள்களை வாங்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கும் அவர்கள், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாகவும் குழந்தைகள், முதியவர்களை வைத்துக்கொண்டு தவித்துவரும் தங்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என நீண்ட வரிசையில் நின்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கொஞ்சம் கூட சிந்தனை இல்லாத அரசால் மக்களுக்கு என்ன பயன்? - திமுக தலைவர் ஸ்டாலின்