புரெவி புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குத்தாலம் ஒன்றியம் கோமல் கிராமம் அம்பேத்கர் நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் மழைநீர் புகுந்தது. சில வீடுகளில் மேற்கூரை பெயர்ந்தது. மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையின் மட்டத்திலேயே வீட்டின் தரைப்பகுதி உள்ளதால் மழைநீர் எளிதாக வீட்டிற்குள் புகுந்தது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
வீட்டிற்குள் புகுந்த மழைநீரை அதன் உரிமையாளர்கள் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஒரு தொகுப்பு வீட்டின் மேற்கூறை விழுந்ததில் 9 வயது சிறுவன் மண்டை உடைந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் வினோத், ஊராட்சி அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அதோடு மட்டும் அல்லாமல் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை அரசுப் பள்ளியில் தங்க வைத்து உணவு வழங்கினர்.
இதையும் படிங்க: புரெவி புயல் எதிரொலி: ராமேஸ்வரத்தில் கனமழை