மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ரோட்டரி கிளப் சார்பாக உடல் ஆரோக்கியத்திற்குச் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரோட்டரி துணை ஆளுநர் என். இளங்கோவன் தலைமையில் இந்த பேரணியைச் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தினந்தோறும் சைக்கிள் ஓட்டினால் புத்துணர்ச்சி அடைய முடியும், மேலும் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் போன்றவற்றை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்து கொண்டனர். சீர்காழி ரயில் நிலையம் தொடங்கிய பேரணி கொள்ளிட முக்கூட்டு, புதிய பேருந்து நிலையம், உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று தென்பாதி தனியார் பள்ளியைச் சென்றடைந்தனர்.
அங்குப் பேரணியில் பங்கேற்றவர்களில் குலுக்கல் முறையில் மாணவர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு மிதிவண்டி இலவசமாக வழங்கப்பட்டது. இதனை 'இதயம் காப்போம்' திட்ட மாவட்டத் தலைவர் வி.பிரபாகர் வழங்கினார்.
இதையும் படிங்க: மலைவாழ் மக்களுக்கு காவல் துறையினரின் உதவி