நாகை மாவட்டம் சீர்காழி கடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இளைஞர் ஒருவர் மது பாட்டில் வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்தபோது மது பாட்டில் சீல் வைத்து மூடிய நிலையில் இருந்தபோதும் பாட்டிலின் உள்ளே நசுங்கிய மூடி ஒன்று கிடந்துள்ளதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளரிடம் இளைஞர் புகார் தெரிவித்துள்ளார். சீல் திறக்காத பாட்டிலின் உள்ளே நசுங்கிய மூடி கிடந்த சம்பவம் மது வாங்க வந்த மது பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.