ETV Bharat / state

'மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தோல்வியடையும்'

நாகை: மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தோல்வியடையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Nagai
author img

By

Published : Apr 3, 2019, 10:24 AM IST

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். நாகை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தோல்வியடையும். இதனால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை முடக்கும் வகையில் இன்றைக்கு வருமானவரித் துறையைப் பயன்படுத்தி சோதனை நடத்தினால், இந்த அணியினுடைய வெற்றியை தடுத்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

பாஜக தலைவர்கள்,அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வீடுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் சோதனை நடத்தாமல் எதிர்க்கட்சிகளின் வீடுகளில் சோதனை நடத்துவது திட்டமிட்ட சதி.

மீத்தேன் திட்டம்தான் ஆபத்தானது; ஹைட்ரோகார்பன் ஆபத்தான திட்டம் அல்ல என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிவருகிறார். அவருக்கு எந்த வாத்தியார் பாடம் நடத்தினார் என்று தெரியவில்லை. இந்தத் திட்டத்தால், விவசாயம் நிலம் நாசமடைவதுடன், மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். இந்தத் திட்டங்கள் குறித்த ஆதாரங்களை அமைச்சர் கேட்டால் நாங்கள் தருகிறோம். இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை கம்யூனிஸ்ட் எதிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், இந்தத் தேர்தலில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் செயல்படுகின்றோம். ஆனால் கேரளாவில் பாஜக கிடையாது. எனவே கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. யார் வெற்றி பெற்றாலும் மத்தியில் மதச்சார்பற்ற அணி அமைப்பதற்கு அந்த வெற்றி பயன்படும் என பதிலளித்தார்.

மா.க.செயலாளர் பாலகிருஷண்ன் பேட்டி

Intro:நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தோல்வியடையும், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி தவறான தகவல்களை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசி வருகின்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி:-

Body: நாகை மாவட்டம் குத்தாலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,
நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தோல்வி அடையும். இதனால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை முடக்கும் வகையில் இன்றைக்கு வருமான வரித்துறையை பயன்படுத்தி ரெய்டு நடத்துவதன் மூலம் இந்த அணியினுடைய வெற்றியை தடுத்து விடலாம் என்று பார்க்கிறார்கள் . இன்றைக்கு பல ஆண்டுகளாக அமைச்சர்களாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் வீடுகளில் ஆயிரம், ஆயிரம் கோடிகளாக அமைச்சர்கள் வீட்டில் பணம் குவிக்கப்பட்டிருக்கின்றது. பாஜக தலைவர்கள் வீடுகளிலும், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வீடுகளிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது அங்கு எல்லாம் சோதனை நடத்தாமல் எதிர்க்கட்சிகள் வீடுகளில் சோதனை நடத்துவது திட்டமிட்ட சதி. இன்றைக்கு ரபேல் உங்களைப் பற்றிய புத்தகத்தை தடை விதித்தார்கள். தலைமை தேர்தல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்த பிறகு மாலையில் அனுமதி வழங்கியுள்ளனர். இப்படிப்பட்ட அராஜக போக்கில் பாஜக - அதிமுக கூட்டணி செயல்படுகின்றது. டெல்டா பகுதி விவசாய நிலங்களை நாசப்படுத்தும் வகையில், இப்படிப்பட்ட அராஜக போக்கில் பாஜக அதிமுக கூட்டணி செயல்படுகின்றது டெல்டா பகுதி விவசாய நிலங்களை நாசப்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வேதாரண்யம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு வேதாந்தான் நிறுவனத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மீத்தேன் திட்டம் தான் ஆபத்தானது ஹைட்ரோ கார்பன் ஆபத்தான திட்டம் அல்ல என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசி வருகின்றார். அவருக்கு எந்த வாத்தியார் பாடம் நடத்தினார் என்று தெரியவில்லை. இந்த திட்டங்களால் விளைநிலம் நாசம் அடைவதுடன் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். இந்த திட்டங்கள் குறித்து ஆதாரங்களை அமைச்சர் கேட்டால் நாங்கள் தருகின்றோம். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை கம்யூனிஸ்ட் எதிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், இந்த தேர்தலில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் செயல்படுகின்றோம். ஆனால் கேரளாவில் பாஜக கிடையாது. எனவே கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. யார் வெற்றி பெற்றாலும் மத்தியில் மத சார்பற்ற அணி அமைப்பதற்கு அந்த வெற்றி பயன்படும்.

பேட்டி : கே.பாலகிருஷ்ணன். மாநில செயலாளர் மா.கம்யூ கட்சி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.