ETV Bharat / state

அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி: தம்பதி கைது - அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி

மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்த தம்பதியினரைத் தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தலைமறைவான தம்பதியை கைது செய்த
தலைமறைவான தம்பதியை கைது செய்த
author img

By

Published : Nov 20, 2021, 11:13 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்த தம்பதியினரைத் தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா, தெற்கு அகஸ்தியர்புரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் அருண்குமார் (36), இவரது மனைவி கிருஷ்ண கோகிலா (29).

இவர்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறையில் ஏழு பேரிடம் ரூ.14 லட்சம் வாங்கிக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றித் தலைமறைவாகிவிட்டதாக திருவிழந்தூர் கே.கே. நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சித்தார்த் (30) என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார்.

இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கடந்த சில நாள்களுக்கு முன்புவரை மயிலாடுதுறை கூறைநாட்டில் வசித்துவந்த தம்பதியினர் இருவரும், கடந்த சில நாள்களுக்கு முன் திடீரென வீட்டைக் காலிசெய்து விட்டுத் தப்பியோடி காரைக்குடியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட காவல் துறையினர் காரைக்குடி விரைந்தனர்.

இதனையடுத்து காரைக்குடி அருணாசலம் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்த அருண்குமார், கிருஷ்ணாகோகிலா தம்பதியினரைத் தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பின்னர் அந்தத் தம்பதியினரை மயிலாடுதுறைக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அருண்குமார் மீது சென்னையில் ஏற்கனவே இவர் பலரிடம் 40 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்து இவர் மீது மோசடி வழக்குள்ளதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 பேரிடம் 38 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:School Leave: தொடர் மழை - 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.