ETV Bharat / state

ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்கள்! - Corona virus awareness painting velankanni

நாகப்பட்டினம்: சாலைகளில் கரோனா வைரஸ் ஓவியத்தை வரைந்து பொதுமக்களிடம் காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

corona
corona
author img

By

Published : Apr 15, 2020, 1:05 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 31 நபர்களுக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்படி, நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் சாலைகளில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கரோனா விழிப்புணர்வு ஓவியம்

அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி நுழைவாயில், பரவை மார்க்கெட் ஆகிய இடங்களில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் ’விழித்திரு! விலகியிரு!! வீட்டிலிரு!!! தனித்து இருப்போம், வீட்டிலேயே இருப்போம், பாதுகாப்பாய் இருப்போம்’ உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

மேலும் அனைவரும் முகக்கவசம் அணிவோம் என்று வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் இளங்கோவனுடன் இணைந்து பொதுமக்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்; உடலை தகனம் செய்ய எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.