ETV Bharat / state

கட்டுப்பாட்டுடன் ரமலான் நோன்பை மேற்கொள்ளுங்கள் - காவல்துறை - கரோனா வைரஸ்

நாகை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரமலான் நோன்பு நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து, நாகையில் இஸ்லாமியர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய பிரதிநிதிகள்

author img

By

Published : Apr 24, 2020, 11:10 AM IST

இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ரமலான் நோன்பு நாளை ஏப்ரல் 25ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ரமலான் நோன்பு காலத்தில், இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாகையை அடுத்த நாகூரில் உள்ள தனியார் திருமண அரங்கில் அம்மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல், வட்டாட்சியர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய பிரதிநிதிகள்
கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய பிரதிநிதிகள்

சமூக இடைவெளியைப் பின்பற்றி நடந்தக் கூட்டத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சக் கூடாது, கூட்டத்தை கூட்டி பொருள்கள் எதும் விநியோகம் செய்யக்கூடாது, கூட்டம் அதிகம் கூடக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்களுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

மேலும், கூட்டத்தில் பேசிய துணை கண்காணிப்பாளர் முருகவேல், ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் என்றும், தொழுகை போன்றவைகளையும் தனித்திருந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட ஜமாத் அமைப்பு மற்றும் இஸ்லாமிய பிரதிநிதிகள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையும் பார்க்க: மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.