ETV Bharat / state

கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள கல்லூரியில் சான்றிதழ் பெற குவிந்த மாணவர்கள்! - பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை

நாகையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வாங்க மாணவ, மாணவிகள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள கல்லூரி: பட்டப்படிப்பு சான்றிதல் பெற குவிந்த மாணவர்கள்!

author img

By

Published : Apr 23, 2021, 6:42 AM IST

நாகப்பட்டினம்: நாகை அடுத்த செல்லூர் பகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக இக்கல்லூரியிஸ் கரோனா சிறப்பு மையமாக மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் கடந்த 12ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில், 50 படுக்கைகள் கொண்ட அந்த கரோனா மையத்தில் கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா நோயாளிகள் கல்லூரியில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டு இருப்பதை அறிந்தும் கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு நேற்று முன்தினம் (ஏப்.21) சான்றிதழ் விநியோகம் செய்வதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை முடித்த மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான கரோனா அச்சமின்றி சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கரோனா மையம் இருப்பது தெரிந்திருந்தால் வருகை தந்திருக்க மாட்டோம் என்று அச்சம் தெரிவித்த மாணவிகள், ஆசிரியர்கள் அழைப்பு கொடுத்ததால் சான்றிதழ் வாங்க வருகை தந்ததாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனா: மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.