கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை நகராட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர சுழற்சி முறையில் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
பழைய பேருந்து நிலையத்திற்கு காய்கறி மார்கெட் மாற்றப்பட்டுள்ளதால், காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக அளவில் மக்கள் வெளியே வருகின்றனர்.
அவர்களிடம் தனி நபர் விலகல், வீட்டில் தனித்து இருக்க வேண்டியதன் அவசியம், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில், சுகாதார அலுவலர் டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமார் தலைமையில், தற்காலிக காய்கறி மார்கெட் பகுதியில் கரோனா விழிப்புணர்வு கோலம் போடப்பட்டது.
இதையும் படிங்க: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மரியாதை - ஊராட்சி நிர்வாகம்