நாகை மாவட்டம் திருமெய்ஞானம் பகுதி அம்மன் ஆற்றின் குறுக்கே ஐந்து கோடியே 85 லட்சம் மதிப்பில் அமைய உள்ள புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பூம்புகார் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி பாலம் கட்டும் பணியினைத் தொடங்கிவைத்தார்.
மேலும், இவ்விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர் சுந்தராஜன், அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பாலத்தால் திருமெய்ஞானம், காலமநல்லூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் எளிதில் கடந்துசெல்ல பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் நீண்டநாள் கோரிக்கை தற்போது நிறைவேறியதற்கு பொதுமக்கள், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காவிரியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தொடக்கம் !