ETV Bharat / state

நாகையில் மீண்டும் பதற்றம்: நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல் - fisher man fight

நாகை: தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும் மற்றொரு மீனவ கிராமத்தினருக்கும் இடையே நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஆறு பேர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பைபர் படகு மோதல்  நாகை மீனவர்கள் பிரச்னை  சுருக்குமடி வலை பிரச்னை  நடுக்கடலில் படகுகளை மோதவிட்டு மீனவர்கள் தாக்குதல்  fisher man fight  fishers conflict
நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே நடந்த மோதல்
author img

By

Published : Mar 11, 2020, 11:16 AM IST

நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதில் மீனவர்களுக்கிடையே நடுக்கடலில் மோதல் ஏற்படுவது வாடிக்கையாகிவருகிறது.

இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் அருகே கீச்சாங்குப்பம் மீனவர்கள் 120 பேர், மற்றொரு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்களை விசைப்படகில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.

அப்போது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஆறு மீனவர்கள் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

இந்தத் தாக்குதலைக் கண்டித்து வெள்ளப்பள்ளத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுக்கடலில் மீனவர்கள் மோதலில் ஈடுபடுவதும் விசைப்படகைக் கொண்டு பைபர் படகு மீது மோதி தாக்குதலில் ஈடுபடும் காணொலி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல்

இதையும் படிங்க: காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை மீனவர்கள் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.