ETV Bharat / state

மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி - மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி

மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக நகரச் செயலாளரை கட்சித் தலைமை அறிவித்துள்ள நிலையில், அப்பதவிக்கு திமுக பிரமுகர் ஒருவரும் முயற்சி செய்து வருகிறார்.

தலைவர் பதவிக்கு கடும் போட்டி
தலைவர் பதவிக்கு கடும் போட்டி
author img

By

Published : Mar 3, 2022, 6:55 PM IST

மயிலாடுதுறை: நகராட்சியில் 35 வார்டுகளுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 24 இடங்களிலும், காங்கிரஸ், மதிமுக தலா 1 இடத்திலும், அதிமுக 7 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதில் வெற்றி பெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் நேற்று (மார்ச் 2) பொறுப்பேற்றனர். இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக மயிலாடுதுறை நகரச் செயலாளர் குண்டாமணி செல்வராஜை நியமித்து அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

நகர்மன்றத் தலைவர் பதவி

இந்நிலையில், 2006-2011 ஆம் ஆண்டில் நகர்மன்றத் தலைவராக இருந்த லிங்கராஜன் என்பவரும் தற்போது நகர்மன்றத் தலைவராக முனைப்புக் காட்டி வருகிறார். நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு முடிந்தவுடன், திமுக மயிலாடுதுறை நகரச் செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தனது ஆதரவு உறுப்பினர்கள் 18 பேரை சொகுசு வேனில் ஏற்றிச் சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அவருக்கே தலைவர் பதவிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

இருப்பினும், லிங்கராஜனுக்கு திமுகவில் ஒரு சாராரும், மாற்றுக்கட்சியினரும் வாக்களிக்க வாய்ப்புள்ளது. மறைமுகத் தேர்தல் என்பதால் எதுவும் நடக்கச் சாத்தியங்கள் உள்ளதால், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் பதவியை அலங்கரிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் 2011-2016 ஆம் ஆண்டுகளில் நகர்மன்ற துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்த குண்டாமணி செல்வராஜ், 15 ஆண்டுகளாக திமுக மயிலாடுதுறை நகரச் செயலாளராக உள்ளார். 3 முறை மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையின் இளம் பட்டியலின பெண் மேயர் வேட்பாளர் - 340 ஆண்டுகால வரலாற்றில் ஒரு மைல்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.