மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் சுமார் 170 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன ரூ.120 கோடியில் அமைக்கப்பட்டு வந்த இத்துறைமுகம் கட்டுமானப் பணி, கடந்த ஆண்டு அடுத்தடுத்து வீசிய இரண்டு புயல்களால் பாதிக்கப்பட்டது.
அதில் கருங்கல் தடுப்புகள் சிதைந்து கடலில் மூழ்கியது. இந்நிலையில் மீண்டும் துறைமுகம் கட்டுமானப் பணி திட்டமிடப்பட்டு, மதிப்பீட்டில் ரூ.50 கோடி அதிகரித்து ரூ.170 கோடியாக உயர்த்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இதையடுத்து கடலில் கருங்கல் தடுப்புகள் பலப்படுத்தப்பட்டும்; கட்டிட அடித்தளம் பலப்படுத்தபட்டும் உயர் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று (ஜூலை 3) துறைமுகம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறியதாவது, “மறு திட்டமிடல் மூலம் தற்போது துறைமுக பணிகள் 90 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்து, அக்டோபர் மாதம் முதல் துறைமுகம் பயன்பாட்டிற்கு வரும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு