நாகையில் கரோனா தொற்று கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட அதிகமாக பரவிவருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1,204 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதில், 632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 558 பேர் மயிலாடுதுறை, நாகை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 11 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று (ஆக.10) மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக நாகை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஒருவார காலம் மூடுவதாக அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி மக்கள் கோரிக்கை தொடர்பாக 9092020923, 9361771714 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.