ETV Bharat / state

கோவிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் - ஆறு பேர் மீது வழக்குப் பதிவு - Bosco case

கோவிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 16, 2022, 1:29 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த மாதானம் கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 14 ஆம் தேதி மாலை இக்கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் சுவாமி வழிபாட்டிற்காக வந்துள்ளார்.

அப்பொழுது இளைஞர்கள் சிலர் அப்பெண்னின் மீது தண்ணீரை அடித்து கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்ணின் தாயார் அக்கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தட்டிக்கேட்டதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக உருவானது. இம்மோதலில் சினிமா காட்சியை போல அக்க பக்க கடைகளை இரு தரப்பினரும் இடித்து தரைமட்டம் ஆக்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

கோவிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல்

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த புதுப்பட்டினம் போலீசார், மாதானம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சூரியமூர்த்தி, முருகன் உள்ளிட்ட மூவரை கைது செய்ததுடன் தலைமறைவான சங்கர் என்பவரை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற சவுரவ் கோசில், தீபிகாவுக்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.