ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் இல்லை - அமைச்சர் சேகர் பாபு

author img

By

Published : Jun 4, 2022, 10:39 PM IST

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி
அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு இன்று (ஜூன் 04) காலை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வருகை புரிந்தார். பின்னர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஆதீனத்தின் 27-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து ஆதீன மடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அமைச்சர் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானம் திறந்து வைத்தனர்.

அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி

பின்னர் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஒரு பகுதியாக ஆதீன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அமைச்சர் அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். அப்போது ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழ்நாடு அரசு வழங்கும், அவற்றின் பாரம்பரியங்களில் தமிழ்நாடு அரசும் அறநிலையத் துறையும், தலையிடாது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கடையூர் கோயில் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. இதுபோன்ற கோயில்களில் சமய அறநிலையத்தறை தலையிடவே தலையிடாது. பொதுக்கோயில்களில் ஏதேனும் பிரச்சினைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு.

இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும்.

ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான். மேலும் திருவாரூரில் இடிந்து விழுந்த பழைமையான மண்டபத்தை சீரமைக்கும் பணி இன்று தொடங்கவுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.