நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் அருகே தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (70). இவர் தனது வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது அங்குள்ள பம்பு செட்டுக்கு தண்ணீர் குடிப்பதுபோல் வந்த அடையாளம் தெரியாத நபர் பிச்சைமுத்துவை பிடித்து தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து பிச்சைமுத்து அளித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன் கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் முத்தழகன் (24), குத்தாலத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பியின் மகன் வாசுதேவன் (30) ஆகிய இருவரையும் வைத்தீஸ்வரன் கோவில் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: 36 வயது பெண் பாலியல் வன்புணர்வு: மூன்று பேர் கைது!