புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த சர்வதேச சதுரங்க சாம்பியன் குகேஷ் உட்பட 4 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 32 விளையாட்டு வீரர்கள் அர்ஜூனா விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து பரிசளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஒலிம்பிக்கில் இரட்டை விருது பெற்ற மனுபாக்கர், உலக செஸ் சாம்பியன் தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், இந்திய ஹாக்கி குழுவின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகளை வரும் 17ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்குகிறார்.
➡️ @YASMinistry announces #NationalSportsAwards 2024
— PIB India (@PIB_India) January 2, 2025
➡️ President of India to give away Awards on 17th January 2025
➡️ ‘Major Dhyan Chand Khel Ratna Award’ is given for the spectacular and most outstanding performance in the field of sports by a sportsperson over the period of… pic.twitter.com/nRY3nsleOY
கேல்ரத்னா விருது பெற்றோர் விவரம்:
கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் ஒரு விளையாட்டு வீரர் சிறப்பாக செயல்பட்டதற்காக 'மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது' வழங்கப்படுகிறது.
வ.எண் | விளையாட்டு வீரர் | விளையாட்டு |
1 | குகேஷ் டி | செஸ் |
2 | ஹர்மன்ப்ரீத் சிங் | ஹாக்கி |
3 | பிரவீன் குமார் | பாரா தடகளம் |
4 | மனு பாக்கர் | துப்பாக்கி சுடுதல் |
இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், குழுவின் பரிந்துரையின் படி விரிவாக ஆய்வுக்குப் பின்னர் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்," எனக் கூறப்பட்டுள்ளது. 17 பாரா ஒலிம்பிக் வீரர்கள் உட்பட 32 விளையாட்டு வீரர்கள் அர்ஜூனா விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கேல் ரத்னா விருதுக்காக மனு பாக்கரின் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இது குறித்து விளக்கம் அளித்த மனு பாக்கர், "பரிந்துரையை பதிவு செய்தபோது சில குறைபாடுகள் இருந்தன.பின்னர் சரி செய்யப்பட்டது,"என தெரிவித்துள்ளார். ஒரு ஒலிம்பிக் போட்டியில் இரட்டை விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். 10 மீட்டர் தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழுவிலும் வெண்கல பதக்கம் வென்றார்.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஹர்மன்ப்ரீத் சிங் கேப்டன் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது. 18 வயதே ஆன குகேஷ் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பெற்றவர் என்ற பெருமையை பெற்றார். செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி தங்கம் வெல்வதற்கு காரணமாகவும் அவர் இருந்தார்.
அர்ஜூனா விருது பெற்றோர் விவரம்:
கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், தலைமைப் பண்பு, விளையாட்டுத் திறன் மற்றும் ஒழுக்க உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காகவும் 'விளையாட்டு மற்றும் விளையாட்டுத் துறையில் சிறந்த செயல்திறனுக்கான அர்ஜுனா விருது' வழங்கப்படுகிறது.
வ.எண் | விளையாட்டு வீரர் | விளையாட்டு |
1 | ஜோதி யர்ராஜி | தடகளம் |
2 | அன்னு ராணி | தடகளம் |
3 | நிது | குத்துச்சண்டை |
4 | சவீட்டி | குத்துச்சண்டை |
5 | வந்திகா அகர்வால் | செஸ் |
6 | சலிமா டெட் | ஹாக்கி |
7 | அபிஷேக் | ஹாக்கி |
8 | சஞ்சய் | ஹாக்கி |
9 | ஜர்மன்ப்ரீத் சிங் | ஹாக்கி |
10 | சுக்ஜீத் சிங் | ஹாக்கி |
11 | ராகேஷ் குமார் | பாரா-வில்வித்தை |
12 | ப்ரீத்தி பால் | பாரா தடகளம் |
13 | ஜீவன்ஜி தீப்தி | பாரா தடகளம் |
14 | அஜீத் சிங் | பாரா தடகளம் |
15 | சச்சின் சர்ஜேராவ் கிலாரி | பாரா தடகளம் |
16 | தரம்பிர் | பாரா தடகளம் |
17 | பிரணவ் சூர்மா | பாரா தடகளம் |
18 | எச் ஹோகடோ செமா | பாரா தடகளம் |
19 | சிம்ரன் | பாரா தடகளம் |
20 | நவ்தீப் பாரா | பாரா தடகளம் |
21 | நிதேஷ் குமார் | பாரா-பேட்மிண்டன் |
22 | துளசிமதி முருகேசன் | பாரா-பேட்மிண்டன் |
23 | நித்யா ஸ்ரீ சுமதி சிவன் | பாரா-பேட்மிண்டன் |
24 | மனிஷா ராமதாஸ் | பாரா-பேட்மிண்டன் |
25 | கபில் பர்மர் | ஜூடோ |
26 | மோனா அகர்வால் | பாரா-துப்பாக்கி சுடும் போட்டி |
27 | ரூபினா பிரான்சிஸ் | துப்பாக்கி சுடும் போட்டி |
28 | ஸ்வப்னில் சுரேஷ் குசலே | துப்பாக்கி சுடும் போட்டி |
29 | சரப்ஜோத் சிங் | துப்பாக்கி சுடும் போட்டி |
30 | அபய் சிங் | ஸ்குவாஷ் |
31 | சஜன் பிரகாஷ் | நீச்சல் |
32 | அமன் | மல்யுத்தம் |
அர்ஜுனா விருது (வாழ்நாள்) விளையாட்டு வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் விளையாட்டில் தங்கள் செயல்திறன் மூலம் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் விளையாட்டு வீரர்களை கௌரவிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு 'துரோணாச்சார்யா விருது' வழங்கப்படுகிறது.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக முதலிடம் வகிக்கும் பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மகா) கோப்பை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்பட்டன மற்றும் விளையாட்டு வீரர்கள் / பயிற்சியாளர்கள் / நிறுவனங்கள் ஒரு பிரத்யேக ஆன்லைன் இணையதளம் மூலம் சுயமாக விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டன. இந்த ஆண்டு இந்த விருதுகளுக்காக ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அவை இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி (ஓய்வு) வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டன, மேலும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், விளையாட்டு இதழியலில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.