நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் லோகநாயகி தாயார் சமேத திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் 27ஆவது தலமான இங்கு எழுந்தருளியுள்ள உற்சவர் தாடாளன் பெருமாள் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
இங்கு ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை (பிப். 07) உலக நன்மைக்காகவும், சுமங்கலி வரம், குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதலுடன் லோகநாயகிதாயார் சன்னதி முன்பு பெண்கள் 108 திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக லோகநாயகி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீபாரதனை நடைபெற்றன.
இதையும் படிங்க: 'கட்டண தரிசனத்திற்கு மட்டும் லட்டு பிரசாதமா' - திருச்செந்தூரில் கேள்வி எழுப்பிய பக்தர்கள்