இலங்கை திருகோணமலைக்கு சுமார் 600 கிமீ கிழக்கு-வட கிழக்கிலும் கன்னியாகுமரிக்கு சுமார் 900 கிமீ தொலைவிலும் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (டிச. 01) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதனையடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால் தனியார் துறைமுகங்களில் உள்ளூர் புயல் முன்னறிவிப்பு கொடி எண் மூன்று ஏற்றப்பட்டுள்ளது.
நிவர் புயலால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இன்னும் மறு உத்தரவு வராமல் உள்ள நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பால் மீனவர்களின் ஆயிரக்கணக்கான படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்!
நாகை: புரெவி புயல் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.