ETV Bharat / state

நடுக்கடலில் மீனவர்கள் கொண்டாட்டம் - வைரலாகும் காணொலி - Nagapattinam

நாகை: நடுக்கடலில் வேகமாகச் செல்லும் படகில் மீனவ இளைஞர்கள் சிலர், பொழுதுபோக்கிற்காக ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொலி வைரலாகிவருகிறது.

video
author img

By

Published : Jul 28, 2019, 1:40 PM IST

தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கான திறமைகளை காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசத்துவது வழக்கம். நாகையில் மீனவ இளைஞர்கள் ஒருபடி மேல் சென்று நடுக்கடலில் படகில் செல்லும்போது ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். அதனை காணொலியாகவும் எடுத்துள்ளனர்.

நடுக்கடலில் கொண்டாட்டம் வைரலாகும் வீடியோ
அந்தக் காணொலியை, நாகப்பட்டினம் நண்பர்கள் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் இளைஞர் ஒருவர் நடுக்கடலில் படகின் வெளியில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் நடித்துள்ளார். தற்போது அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Intro:நடுக்கடலில் ஆடல், பாடல் கொண்டாட்டம் - வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.Body:நடுக்கடலில் ஆடல், பாடல் கொண்டாட்டம் - வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கான திறமைகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில், பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அசத்துபவர்கள் மத்தியில் ஒருபடி மேல் சென்று நடுக்கடலில் படகில் செல்லும்போது வீடியோ எடுத்து அசத்தியுள்ளனர் நாகை மீனவ கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள்.

நாகையில் இருந்து கடலுக்குள் பல கிலோமீட்டர் தூரம் மீன் பிடிக்க சென்ற மீனவ கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அவர்கள் மீன்பிடித்து திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும் அந்த நேரத்தில் தங்களின் பொழுதைப் போக்க வேகமாகச் செல்லும் படகில் இருந்தபடியே திரைப்பட நகைச்சுவை காமெடி, ஜீன்ஸ் படப்பாடல், செந்தூர பூவே பாடல், என்னவளே என்னவளே உள்ளிட்ட சினிமா பல பாடல்களுக்கு அருமையாக நடனமாடி அசத்தியுள்ளனர். இவற்றை தங்களின் கைப்பேசியில் பதிவு செய்தவர்கள், நாகப்பட்டினம் நண்பர்கள் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பிரபலமடைந்து வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.