ETV Bharat / state

‘ஓபிஎஸ்-ஐ வைத்து அதிமுகவை உடைக்கப் பார்க்கிறது பாஜக!’ - நாஞ்சில் சம்பத் - திமுக கூட்டம்

நாகப்பட்டினம்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலமாக அதிமுகவை உடைக்க பாஜக முயற்சிப்பதாக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

nanjil sampath
author img

By

Published : Jul 1, 2019, 7:42 AM IST

மயிலாடுதுறையில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றுப் பேசுகையில், அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்றும், அதனால்தான் கோடிக்கோடியாக செலவழித்தும் கொங்கு மண்டலத்தில் கூட அதிமுக வெற்றிபெற முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

அதேபோல், "நாடாளுமன்றத்தில் ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் பேசுகையில், ‘ஜெய்ஹிந்த், பாரத் மாதாகி ஜே’ என்று கூறுகிறார். மோடியின் வடிவில் விவேகானந்தரைப் பார்க்கிறேன் என்கிறார். ஓபிஎஸ்-ஐ பயன்படுத்தி அதிமுகவை உடைக்க பாஜக ஒத்திகை பார்க்கின்றது" என சாடினார்.

நாஞ்சில் சம்பத் பேச்சு

தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பிய நிர்மலா சீதாராமன், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏன் ஹெலிகாப்டரை அனுப்பவில்லை? நீட் தேர்வு விலக்கிற்காக அமைச்சரவையில் போட்ட தீர்மானம் எங்கே சென்றது? அதை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம், அதிமுக அமைச்சர்களுக்கு உண்டா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

Intro:ஓ.பி.எஸ் ஐ பயன்படுத்தி அதிமுகவை உடைக்க பாஜக ஒத்திகை பார்க்கின்றது, மயிலாடுதுறை திமுக பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு :-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசும்போது, அதிமுக மேல் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. அதனால்தான், கோடிகோடியாக செலவழித்தும், பெரிதும் நம்பியிருந்த கொங்கு மண்டலத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. திமுகவின் பிரச்சாரத்தையும் தாண்டி பொதுமக்கள் பெரும் வெற்றியை அளித்தது, அதிமுக, பாஜக மேல் இருந்த வெறுப்புதான் காரணம் என்றார். மேலும், பாராளுமன்றத்தில் ஓ.பி.எஸ் மகன், ஓ.பி.ரவிச்சந்திரன் பேசும்போது, ஜெய்ஹிந்து, பாரதமாதகிஜே என்று கூறுகிறார். மோடியின் வடிவில் விவேகானந்தரை பார்க்கிறேன் என்கிறார். ஓ.பி.எஸ்ஐ பயன்படுத்தி அதிமுகவை உடைக்க பாஜக ஒத்திகை பார்க்கின்றது. ஓ.பி.எஸ். தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பிய நிர்மலா சீத்தாராமன், கஜா புயலில் பாதிக்கப்படட மக்களுக்கு ஏன் ஹெலிகாப்டரை அனுப்பவில்லை. நீட் தேர்வு விலக்கிற்காக அமைச்சரவையில் போட்ட தீர்மானம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம், அதிமுக அமைச்சர்களுக்கு உண்டா என்று கேள்வி எழுப்பினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.