ETV Bharat / state

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் சலசலப்பு.. பாஜக தொண்டர்கள் தள்ளுமுள்ளு!

Amrit Bharat programme: 'அம்ரித் பாரத்' திட்ட நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை பேச அனுமதிக்கப் படாததை கண்டித்து அக்கட்சியினர் மேடையின் முன்பு கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

'அம்ரித் பாரத்' திட்டம்: 25 ஆயிரம் கோடி செலவில் புணரமைக்கப்படும் ரயில் நிலையங்கள்

author img

By

Published : Aug 6, 2023, 4:19 PM IST

Updated : Aug 6, 2023, 4:49 PM IST

BJP Members Protested in 508 Railway Stations Lay Foundation Function

மயிலாடுதுறை: சமீபகாலமாக இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. அதேபோல, ரயில்வே பணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

அதில் ஒன்று தான் "அம்ரித் பாரத்" திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த 508 ரயில் நிலையங்களும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற உள்ளன.

இதற்கான பணிகளை இன்று (ஆகஸ்ட் 6) பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். டெல்லியில் இருந்தப்படியே காணொளி மூலம் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 508 ரயில் நிலையங்களின் பணிகள் இன்று தொடங்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியின் போது, ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், கூடுதல் நடைமேடைகள், லிப்ட் வசதி, வாகன நிறுத்த வசதி, கேமரா பொருத்துதல், நுழைவு வாயில் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற உள்ளது.

இந்த 'அம்ரித் பாரத்' திட்டம் மூலம் உத்தர பிரதேசத்தில் 55 ரயில் நிலையங்களும், பீகாரில் 49 ரயில் நிலையங்களும், மகாராஷ்டிராவில் 44 ரயில் நிலையங்களும், மேற்கு வங்கத்தில் 37 ரயில் நிலையங்களும், மத்திய பிரதேசத்தில் 34 ரயில் நிலையங்களும், அசாமில் 32 ரயில் நிலையங்களும், ஒடிசாவில் 25 ரயில் நிலையங்களும், பஞ்சாபில் 22 ரயில் நிலையங்களும், குஜராத், தெலங்கானாவில் தலா 21 ரயில் நிலையங்களும், ஜார்க்கண்டில் 20 ரயில் நிலையங்களும், ஆந்திராவில் 18 ரயில் நிலையங்களும், ஹரியானாவில் 15 ரயில் நிலையங்களும், கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன. அதன்படி, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் 381 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மறு வடிவமைப்பு செய்யும் பணிக்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தொடக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மயிலாடுதுறை ரயில் நிலையம் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளது.

இதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட். 6) நடைபெற்ற விழாவில் மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், பாஜக நிர்வாகிகள் மற்றும் ரயில்வே நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசுவதற்கு பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரத்தை பேச அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதைக் கண்டித்து விழா மேடையின் முன்பு பாஜக நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு ரகளையில் ஈடுபடத் தொடங்கினர். தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர். இதனால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

இதைத்தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து வைத்த ரயில்வே அதிகாரிகள், பாஜக மாவட்ட தலைவர் பேசுவார் என அறிவித்தனர். இதனால் பாஜக நிர்வாகிகள், பாரத் மாதா கி ஜே என முழக்கங்களை எழுப்பியவாறு தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். இதை தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மேடையில் சிறிது நேரம் பேசிய பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்து சுமூகமாக நடைபெற்றது.

இதையும் படிங்க: புதுக்கோட்டை பட்டாசு ஆலை தீ விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு!

Last Updated : Aug 6, 2023, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.