நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு. இவர் 17 வயதில் கொலை வழக்கில் கைதாகி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை பெற்று விடுதலையானவர். தற்போது பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிங்காரவேலு மீது காவல் துறையினர் அடிக்கடி வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் வந்து அவர் தீக்குறிக்க முயற்சித்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், "திருந்தி வாழும் எனது கணவரை காவல் துறையினர் அடிக்கடி வந்து அழைத்து செல்கின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மனைவி விட்டு சென்ற விரக்தியில் பிள்ளைகளுடன் தீ குளிக்க முயன்ற கணவன்!