ETV Bharat / state

வளர்ப்பு நாய்க்கு சீமந்தம்.. சீர்காழி குடும்பத்தின் பாசம்! - கர்ப்பமான நாய்

சீர்காழி அருகே நான்கு வருடமாக வளர்த்து வரும் செல்ல நாய் கர்ப்பமான நிலையில் அதற்கு உரிமையாளர் குடும்பத்தினர் சீமந்தம் செய்து அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 30, 2022, 4:48 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள ஓலையாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் ஹரிஹரன். பட்டதாரி இளைஞரான ஹரிஹரன், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய் குட்டியை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார்.

மகனின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோரும் நாய்க்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக நாய் குட்டியை தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக வளர்த்து வந்தனர். அந்த நாய்க்கு சேச்சி என பெயரிட்டு தங்கள் குடும்ப உறுப்பினராகவே வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தாங்கள் வளர்த்து வரும் செல்லப்பிராணி சேச்சி முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை கொண்டாடும் வகையில் சீமந்தம் செய்திட முடிவு செய்யதனர். முதலில் தயங்கிய ஹரிஹரனின் பெற்றோர், பின்னர் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் செல்லப்பிராணிக்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.

நாய்க்கு சீமந்தம் செய்த உரிமையாளர்

அதன்படி நல்ல நாள் பார்த்து இன்று (நவ.30) சேச்சிக்கு சீமந்தம் செய்தனர். முன்னதாக ஆப்பிள் உள்பட பழ வகைகள் இனிப்புகளை சீர் வரிசை தட்டுகளாக வைத்தனர். நெருங்கிய உறவினர்கள் ஒருசிலரை மட்டும் சீமந்தத்திற்கு அழைத்தனர். பின்னர் சேச்சிக்கு அலங்காரம் செய்து சேச்சியை நிற்க வைத்து நலங்கு வைத்து ஆரத்தி எடுக்கப்பட்டது. இதனை வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: TNEB Aadhaar Link: மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. குழப்பத்தில் மக்கள்; அரசின் விளக்கம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.