ETV Bharat / state

தருமபுரம் ஆதீனத்தில் ஆயுதபூஜை விழா

தருமபுரம் ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்டுவரும் தொன்மைவாய்ந்த பொருட்களுக்கும், பழைமையான ஆதீன நூல்களுக்கும் சிறப்பு ஆயுதபூஜை வழிபாடு நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தில் ஆயுதபூஜை விழா
தருமபுரம் ஆதீனத்தில் ஆயுதபூஜை விழா
author img

By

Published : Oct 4, 2022, 3:05 PM IST

Updated : Oct 4, 2022, 3:26 PM IST

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தில் இன்று(அக்.04) ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதீன பூஜை மடத்தில், பார்வதி, லெட்சுமி மற்றும் சரஸ்வதி உருவத்தை ஆவாகனம் செய்து சிறப்புப்பூஜை நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, இந்த ஆண்டு மே மாதம் உலகம் முழுவதும் பேசப்பட்ட தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசத்துக்கு பயன்படுத்திய சிவிகைப்பல்லக்கு, நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி, எடுபிடி உள்ளிட்ட ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தபட்டுவரும் தொன்மைவாய்ந்த பொருட்களுக்கும் பூஜை செய்தார்.

தருமபுரம் ஆதீனத்தில் ஆயுதபூஜை விழா

மேலும் பழைமையான ஆதீன நூல்களுக்கும் சிறப்புப்பூஜை செய்து, அம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட சோடஷ உபசார தீபாராதனை உள்ளிட்ட 16 விதமான ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதில், ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: துர்கா பூஜையில் காந்தி சிலை அவமதிப்பு விவகாரம்: இந்து மகாசபா மீது வழக்குப்பதிவு

Last Updated : Oct 4, 2022, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.