ETV Bharat / state

'ஆவணி மூலத்திருநாளே தொழிலாளர் நாளாகக் கொண்டாட வேண்டிய நாள்'

இறைவன் கூலித்தொழிலாளியாக வந்து, வேலை சரியாகச் செய்யவில்லை என்றால் தண்டனை கிடைக்க வேண்டுமென்ற திருவிளையாடலை நிகழ்த்திய ஆவணி மூலத்திருநாளே தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட வேண்டிய நாள் என தருமபுரம் ஆதீனம் பேசியுள்ளார்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்
author img

By

Published : Aug 19, 2021, 8:38 AM IST

Updated : Aug 19, 2021, 9:24 AM IST

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற ஆவணி மூலத்திருநாள் விழாவில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டார்.

அந்த விழாவில் பேசிய தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், "இறைவன் தொழிலாளியாக வந்து கூலி வாங்கிக்கொண்டு, வேலை சரியாகச் செய்யவில்லை என்றால் தண்டனை கிடைக்க வேண்டுமென்ற திருவிளையாடலை நிகழ்த்திய ஆவணி மூலத்திருநாளே தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட வேண்டிய நாள்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

அருணை பாலறாவாயனுக்கு 'தருமையாதீனப்புலவர்' விருது

அரசு மே மாதங்களில்தான் தொழிலாளர் நாள் கொண்டாடுகிறது. உண்மையிலேயே தொழிலாளர் நாள் கொண்டாடப்பட வேண்டியது ஆவணி மூலத் திருநாளில்தான். சுவாமி எல்லாருடைய வேலைகளையும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அனுக்கிரகம் செய்தார்" என்று கூறினார்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா 1951ஆம் ஆண்டுமுதல் ஆதீன கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாவாகவும் - தமிழ்மொழி, சமயம், தத்துவம், இலக்கியம், கலை முதலியவற்றில் புலமைபெற்ற அறிஞர் ஒருவருக்கு பட்டம் வழங்கி பாராட்டும் விழாவாகவும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது.

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கேற்றிய தருமபுரம் ஆதீனம்

அவ்வகையில் இந்த ஆண்டு ஆவணி மூலத் திருநாள் திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெற்றது. இதில், சென்னையைச் சேர்ந்த முனைவர் அருணை பாலறாவாயனுக்கு 'தருமையாதீனப்புலவர்' என்னும் விருதினை தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வழங்கி அருளாசி கூறிப் பேசினார்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

சமூகப் பொறுப்புள்ள தருமை ஆதீனம்

தருமபுரம் ஆதீனம் சைவ மடங்களுள் ஒன்றாகும். 1987 இல் சுமார் 27 சிவாலயங்கள் தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தன. வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற சிவாலயங்கள் இந்த ஆதீனத்திற்குச் சொந்தமானதாகும். இவ்வாதீனம் ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டண உதவிபுரிந்தும் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

இந்தத் தருமை ஆதீனம் சமயம் சார்ந்த அரும்பணிகளோடு, மயிலாடுதுறையில் மகப்பேறு மையம் அமைத்தும், சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் மருத்துவ மையம் (அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்) போன்ற பொது நிறுவனங்களுக்குப் பெருந்தொகை வழங்கியும் வருகின்றது.

இதையும் படிங்க: 293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டேன் - நித்தியானந்தா அறிவிப்பு

Last Updated : Aug 19, 2021, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.