முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனோடு சேர்ந்து மே 21ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைய மாநாட்டு கூடத்தில் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார், பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க, அதனை மற்ற அரசு ஊழியர்களும் ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.