மயிலாடுதுறை: இறைதூதர் நபிகள் நாயகம் குறித்தும், இஸ்லாமிய மதம் மற்றும் மார்க்கத்தைக் குறித்தும் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன், ஜெய்சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோரிடம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர்.
தொடர்ந்து மதக்கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் வேலூர் இப்ராஹிம், கல்யாணராமன் போன்றோரை வருங்காலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.