ETV Bharat / state

விதவைப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதிமுக நிர்வாகி!

author img

By

Published : Mar 22, 2022, 7:49 PM IST

விதவைப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வேளாங்கண்ணி அதிமுகவை சேர்ந்த நிர்வாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு கைது நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

விதவைப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு
விதவைப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பூக்காரதெருவைச் சேர்ந்தவர் ரம்யா, இவரது கணவர் லியோ ஜோசப், கடந்த ஆண்டு கரோனா தொற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து, ரம்யா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

கணவனை இழந்த ரம்யா தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளராக உள்ள விநாயக மூர்த்தி என்பவர் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வேளாங்கண்ணியை சேர்ந்த விதவை பெண் ரம்யா, அதிமுக மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளர் விநாயகமூர்த்தி மீது, நாகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில், பெண்ணை அவமானப்படுத்துதல் மற்றும் அவரிடம் கொச்சை வார்த்தைகள் கூறி அத்துமீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாகை மகளிர் காவல்துறையினர் அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக இருந்த விநாயக மூர்த்தியை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாகி தேடப்பட்டு வந்தயை விநாயகமூர்த்தி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அவர்களால் கைது செய்யப்பட்டு, சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொண்டு பொறையார் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருத்தணியில் ஆணவக்கொலையா? - தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.