சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. இவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென தனியிடம் பிடித்தவர். தற்போது மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான மலையாள படமான 'காதல் தி கோர்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜோதிகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சூர்யாவும் காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகளின் படிப்புக்காக ஜோதிகா மும்பையில் தற்போது வசித்து வருகிறார்.
இதையும் படிங்க : என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக மிரட்டும் சூப்பர் ஸ்டார்... 'வேட்டையன்' டிரெய்லர் வெளியானது!
இந்நிலையில் சூர்யா, ஜோதிகாவின் மகளான தியா பள்ளியில் நடந்த போட்டிக்காக ஆவணப்படம் ஒன்று எடுத்து விருது பெற்றுள்ளார். இதனை ஜோதிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சினிமா துறையில் ஒளிப்பதிவு தொடர்பான வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி ஆவணப் படம் எடுத்ததற்கு பெருமையாக உள்ளது தியா. இதேபோல் தொடர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியதற்கு மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
தியா இயக்கிய லீடிங் லைட் திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருதும் தியாவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் அடுத்த மாதம் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்