ETV Bharat / state

ஈஷா யோகா மையம் வழக்கு: விசாரணை நிறைவு; கோவை எஸ்.பி. தகவல்! - case on isha Yoga center - CASE ON ISHA YOGA CENTER

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரம் ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது மகள்களை பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாக அவர்களின் தந்தை அளித்த வழக்கு மீதான விசாரணை நிறைவு பெற்றதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஈஷா யோகா மையம்,
காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஈஷா யோகா மையம், (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 11:07 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரம் ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது மகள்களை பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாக வடவள்ளியை சார்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது ஈஷா மையம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள், வழக்குகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈஷா யோகா மையத்தின் மீது உள்ள வழக்குகள் உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது.

இதையடுத்து கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் செவ்வாய் கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 6 குழுக்களாக பிரிந்து இந்த விசாரணையானது நடத்தப்பட்டது.

காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

முதல் நாளான நேற்று (அக்.1) காலை 9 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், இன்று (அக்.2) இரண்டாவது நாளாக விசாரணையானது நடைபெற்றது. ஈஷா யோகா மையத்தில் உள்ள அறைகளில் போலீசார் சோதனையிட்டனர். அதில் வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி இருக்கும் நபர்களிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக இருக்கிறதா? என்பது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: 'குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை': ஈஷா அறக்கட்டளை விளக்கம்

மேலும் ஈஷா பள்ளி வளாகத்தில் தங்கி படிக்கும் குழந்தைகளிடம், குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதையடுத்து ஈஷா மையத்தில் தங்கி இருக்கும் துறவறம் பெற்றுள்ள பெண்களிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ கேமராவிலும் பெண்களின் பதில் பதிவு செய்யபட்டது.

இந்நிலையில் இரவு 8 மணி அளவில் ஈஷா யோகா மையத்தில் நடந்த இரண்டாவது நாள் சோதனை நிறைவடைந்தது.விசாரணைக்கு பின் ஈஷா யோகா மையத்தில் இருந்து இருந்து வெளியில் வந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “விசாரணை முழுமையாக முடிவடைந்தது. விசாரணை குறித்த விவரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். இன்று நடந்த இரண்டாவது நாள் சோதனையில் கூடுதலாக சுகாதார துறையினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மனநல ஆலோசகர் உள்ளிட்டோர் ஈடுபடுத்தபட்டு இருந்தனர்.

ஈஷா மையத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர் குறித்தும், தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. எனவும் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும். மேலும் ஈஷா மையத்தின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் அனைத்தையும் எடுத்து இருக்கிறோம். அதில் ஒரு சில முக்கியமான வழக்குகளும் இருக்கிறது. இதே போல ஈஷா யோக மையம் கொடுத்திருக்கக்கூடிய புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.