சந்திரகேஸ்வரர் சுவாமி, லட்சுமி நாராயண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 65 ஆயிரம் சதுரஅடி இடத்தை மாணவர்கள் கல்வி பயில பள்ளிக்கூடம் கட்டுவதற்காக இரண்டு கோயில் நிர்வாகத்தினர் சேர்ந்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மயிலாடுதுறை என்ற பெயருக்கு எழுதி வைத்துள்ளனர்.
இந்த இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் 25 ஆயிரம் சதுரடியை பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் பள்ளிக்கூடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சுற்றுசுவர் அமைக்கப்பட்டுவிட்டால், பள்ளிக்கு சொந்தமான 25 ஆயிரம் சதுர அடி இடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாசம் மாறிவிடும். எனவே உடனடியாக பள்ளிக்கூடம் அமைந்துள்ள இடத்தை அளவீடு செய்து எல்லைக் கற்களை அமைத்து, அதன் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஆகியோருக்கு கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ராயபுரத்தில் ஆறாயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு