நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கரின் சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது. இந்த சிலை உடைப்பிற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், அண்ணல் அம்பேத்தர் சிலையை சமூக விரோதிகள் உடைத்ததை கண்டித்தும், தலைவர்களின் சிலைகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் சீர்காழியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் முன்பு வழக்கறிஞர்கள் தங்களது கண்களில் கறுப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.