நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். மேலும், மாணிக்கப்பங்கு ஊராட்சியில், பல்நோக்குப் பேரிடர் மையம் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், மருத்துவம் உள்ளிட்ட இதர வசதிகளையும் தரங்கம்பாடி தாலுகா பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், புயல் பாதுகாப்பு மைய சிறப்பு அலுவலர் சாஜிதா பர்வீன் ஆகியோர் இன்று (நவ. 25) ஆய்வுசெய்தனர்.
தொடர்ந்து, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களைச் சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து, பேரிடர் மையத்தில் தயார்செய்யப்பட்டிருந்த மதிய உணவை, முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்குச் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் வழங்கினார். மேலும், அரசு அறிவுரைகளை ஏற்று, பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!