மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த தென்பாதி மேட்டுத்தெருவில் வசித்து வருவபர் செல்வகுமார். நேற்றிரவு (ஏப்.29) இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எறியத் தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்குத் தகவல் அளித்ததின் பேரில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயினை அணைக்க முயன்றனர்.
ஆனால் வீடு முழுவதும் தீ பரவி எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக, வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் சேதமின்றி தப்பித்தனர். கூரைவீடு முற்றிலும் எரிந்ததில் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. விபத்து குறித்து அறிந்த பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.